திரு. நடேசம்பிள்ளை பாலசுந்தரம்பிள்ளை
(ஓய்வுபெற்ற தபால் அதிபர்)
மறைவு: 30 டிசம்பர் 2024
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசம்பிள்ளை பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசம்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான முத்துவேலு - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இராஜபூபதி (ஆசிரியை - சாவகச்சேரி இந்து கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
கலைவாணி, தமயந்தி ஆகியோரின் அன்பு தந்தையும்,
ஞாணபண்டிதன், காலஞ்சென்றவர்களான கௌரி அம்பாள், திருவேணி, சுவாமிநாதப்பிள்ளை, உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணாநிதி, ஞானசேகரம் ஆகியோரின் மாமனாரும்,
அபித்தா, அனன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின்புகழுடல் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
