Mr. Nadesan Sinnasamy Udaiyar (N.S)

Nadesan Sinnasamy Udaiyar (N.S)

Date of Birth: 12 March 1956 - Deceased: 01 April 2025

இந்தியா - நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் புதூர், ஹப்புத்தளை தங்மலையைச் சேர்ந்த திரு. நடேசன் சின்னசாமி உடையார் அவர்கள் 01-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடேசன் உடையார் - பாப்பு அம்மாள் தம்பதியினரின் மகனும்,  காலஞ்சென்ற மூக்கையா உடையார் - சிவபாக்கியம் (தெல்தோட்டை பட்டியகம) தம்பதியினரின் மருமகனும்,

கங்காரமணி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷிகாவின் அன்புத் தந்தையும்,

சஞ்சய் துஷ்யந்தின் அன்பு மாமனாரும்,

சாதனா, விஷாந்த் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

திரு.திருமதி. மனோஜ் (வெலிமட) தம்பதியினரின் சம்பந்தியும்,

சிதம்பரம் (பண்டாரவளை), செல்வராசு (நியூ வசந்தா ஜூவலர்ஸ் - பண்டாரவளை), காலஞ்சென்றவர்களான செல்லமுத்து ராஜரத்தினம், ராமசாமி முத்துலட்சுமி மற்றும் கல்யாணி சந்திரசேகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாசுதேவன், நவனீதராஜா, பாக்கியநாதன், ராதாகிருஷ்ணன், சந்திரமலர், செந்தில் வடிவு, சரோஜினி, தனலட்சுமி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற சத்தியவாணி ஆகியோரின் மைத்துனரும்,

தங்கராஜா, காலஞ்சென்ற மகேஸ்வரன், கனகரட்ணம், பாஸ்கர் ஆகியோரின் சகலையும்,

செந்தில்குமரன், ஷர்மிளா திருகேஸ்வரன், யாழினி தனேஸ்குமார் ஆகியோரின் சித்தப்பாவும்,

குகலஷ்மி, கவிநேசன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-04-2025 புதன்கிழமை காலை 7:00 மணி முதல் இல-6, சேர்வுட் வீதி, ஹப்புத்தளை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-04-2025 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் புகழுடல் பண்டாரவளை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2025 04:00)