Mr Nadesapillai Santhalingam
(உரிமையாளர் - New Suncity Reception Hall)
Date of Birth: 15 September 1965 - Deceased: 07 February 2024
இந்தியா திருச்சி மாவட்டம் புதுவிளாரிப்பட்டி கிராமத்தைப் பிறப்பிடமாகவும், பூண்டுலோயாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசபிள்ளை சாந்தலிங்கம் அவர்கள் 07-02-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற நடேசபிள்ளை - தவமணி தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
தமிழ்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
நவயோகன், சசிகரன், அருனிமா, கிரிஸ்மா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவபிரியா அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜலிங்கம், கனகலிங்கம், மனோகரி, யோகலிங்கம் மற்றும் கிருஷ்ணவேனி, விஸ்வலிங்கம் (நீர்கொழும்பு), பிரபாகரன் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேந்திரனின் மைததுனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-02-2024 சனிக்கிழமை அன்று இல -111, பனியகடை வீதி, பூண்டுலோயா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் தலவாக்கவை தகனசாலையில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
