திரு. நடேசு மகேந்திரராஜா

நடேசு மகேந்திரராஜா

தோற்றம்: 05 மார்ச் 1928 - மறைவு: 13 ஜனவரி 2025

யாழ். சுதுமலையை பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, தாவடி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நடேசு மகேந்திரராஜா அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடேசு - தையல்நாயகி தம்பதியினரின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற  சின்னராசா - ஆச்சிமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற கண்மணி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற மகாதேவன், மகாலட்சுமி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தமயந்தி (கனடா), சுகந்தி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தந்தையும்,

யோகநாதன் (கனடா), தயாசீலன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கோகுலன், டொமினிகா, கீர்த்தீகன், செண்பகா, கரணியா, கிர்ஷிகன், கேசிகன், சுருதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கைலாசின் ஆசை பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00 - 8.00 மணி வரை Ogden Funeral Homes (4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3 Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/01/2025 05:00)