திரு நாகலிங்கம் அருள்நந்திசிவம்
(ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர்)
மறைவு: 04 மே 2024
யாழ். காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், வேம்படி மற்றும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் அருள்நந்திசிவம் அவர்கள் 04-05-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற உடையார் நாகலிங்கம் - அன்னபூரணி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி நடராஜா (முறிகண்டியான் வைத்தியசாலை) - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, தியாகராஜா ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற கணேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
கணநாதா (அவுஸ்திரேலியா), சண்முகநாதா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவரூபி, சிவபாலன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பேராசிரியர் சர்வேஸ்வரன் (சட்ட பீடம்-கொழும்புப் பல்கலைக் கழகம்), ஜெயகௌரி (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைத்திய கலாநிதி துளசி (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை), விசாகன் (சட்டத்தரணி), கஜலட்சுமி (ரயர்ஷன் பல்கலைக் கழகம், கனடா), வைத்திய கலாநிதி பிரகாஷ் (கொழும்பு தேசிய வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சோழாவின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 08-05-2024 புதன்கிழமை அன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-05-2024 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெற்று, அதன் பின்னர் கல்கிசை பொது மயானத்திற்கு தகனக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/05/2024 04:00)
