Mr. Nagalingam Kathirhamathas
Date of Birth: 11 May 1941 - Deceased: 27 December 2023
ஈபோ மலேசியாவைப் பிறப்பிடமாகவும் , யாழ் சுன்னாகம் முத்துக்கிருஷ்ணர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கதிர்காமதாஸ் அவர்கள் இன்று 27-12-2023ம் திகதி புதன்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதியரின் அன்பு புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சத்தியபாமா அவர்களின் அருமைமிகு சகோதரனும்,
பாரதி (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் வலிகாமம் கல்வி வலயம்), ஹரன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவனா(அவுஸ்ரேலியா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
பாலகிருஸ்ணன் (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்), பேராசிரியர் தில்லைநாதன், இராமநாதன் (ஓய்வுபெற்ற நீரியல் அளவையாளர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வித்தகன், கிரூசிகன், பார்க்கவி, தனீஷா, சஹேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 28-12-2023ம் திகதி வியாழக்கிழமை காலை 8: 30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் கொத்தியாலடி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/12/2023 07:11)
