Mr. Nagalingam Paramasivam

(Retired Gramasevaka)

Nagalingam Paramasivam

Date of Birth: 05 July 1948 - Deceased: 22 May 2023

யாழ் மீசாலை கிழக்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் , மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் அல்லாரை தான்தோன்றி தாழையடி கண்ணகி அம்மன் ஆலய தர்மகர்தாவும், சமாதான நீதவான் மற்றும் மட்டுவில், சரசாலை, மீசாலை ஆகியவற்றில் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்ற நாகலிங்கம் பரமசிவம் அவர்கள் நேற்று 22-05-2023ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதியரின் சிரேஷ்ட மகனும்,

காலஞ்சென்றவர்களான பரமகுரு செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

நவநீதவல்லி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவசுதன் (ஆசிரியர், கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி), சிவாஜினி (ஆசிரியை, கொழும்பு சென் தோமஸ் கல்லூரி), சிவநந்தினி (லண்டன்), சிவநிரூபன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேனகா (இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாடு திணைக்களம் கொழும்பு), வதனதாசன் (சம்பத் வங்கி), விஜயரூபன் (லண்டன்), ஹர்ணிகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கனகம்மா -நற்குணம் (ஓய்வுபெற்றஉபஅதிபர்அல்லாரை), மங்களேஸ்வரி -இராமச்சந்திரன் (ஓய்வுபெற்ற பிரதம லிகிதர் கூட்டுறவுச் சங்கம் சாவகச்சேரி), காலஞ்சென்ற புவனேஸ்வரி -நாகேந்திராசா (ஓய்வுபெற்ற கனிஷ்ட அதிபர் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயம்), திரு ஆனந்தசிவம் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் கட்டிடத் திணைக்களம் மன்னார்), திரு நடராசசிவம் (ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர், நீர்ப்பாசன திணைக்களம்), இராஜேஸ்வரி சிவலிங்கம் (ஓய்வுபெற்ற உதவி வைத்திய அதிகாரி, சாவகச்சேரி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

மதுரேஸ்வரி, ஆதீஸ்வரி, சிவலிங்கம், அன்னலட்சுமி -கணேசலிங்கம்,
இராசலட்சுமி- கிருஸ்ணானந்தன், நாகராசா-மங்களேஸ்வரி,
பரமராசா -தங்கேஸ்வரி, வேதநாயகி-சாம்பசிவம், புஸ்பராணி-யோகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அபிசனா, அபிஷ்கர், அனுஷ்கா, மிதுஷா, தாரிகா, திவ்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 24-05-2023ம் திகதி புதன்கிழமை முற்பகல் 10,00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/05/2023 19:54)