திரு நாகலிங்கம் சின்னத்தம்பி தம்பிராஜா

(யாழ் புகையிரத நிலைய முன்னாள் அதிபர்)

நாகலிங்கம் சின்னத்தம்பி தம்பிராஜா

தோற்றம்: 04 மார்ச் 1926 - மறைவு: 12 பெப்ரவரி 2024

யாழ்.  சண்டிலிப்பாய் மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் இந்துக் கல்லூரி பழைய மாணவரும், ஓய்வுபெற்ற யாழ்ப்பாண புகையிரத அதிபரும், மானிப்பாய்  பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு  நாகலிங்கம் சின்னத்தம்பி தம்பிராஜா அவர்கள் 12-02-2024ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. சின்னத்தம்பி (றெஜிஸ்டார்) - சின்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், 
 
காலஞ்சென்றவர்களான  திரு. கனகரத்தினம் - அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
 
வாசுகி அவர்களின் பாசமிகு தந்தையும்,
 
சிவராஜா அவர்களின் மதிப்புக்குரிய மாமனும்,
 
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், நவலட்சுமி, ராஜேந்திரம், யோகேஸ்வரி, சிவலோகசுந்தரம், பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
அவர்கள் வழியில்  காலம்சென்றவர்களான  தியாகராஜா, நடராஜா, நமசிவாயகம் மற்றும் சுகுணா, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ,
 
அத்துடன் இவர் மனைவி வழி விக்னேஸ்வரி, காலஞ்சென்றவர்களான  விமலேஸ்வரி, கஜேந்திரதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்றவர்களான மகாதேவா, ராமத்திலகம் மற்றும் யோகராணி ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
அஞ்சலிக்காக 28-02-2024ம் திகதி புதன்கிழமை
நேரம் ம.ப.10:30 - பி.ப 12:30 மணி வரை
 
தகனக்கிரியை:-
 
பி.ப 1:45 மணிவரை நடைபெறும்

அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அதே மண்டபத்தில்  அதனைத் தொடர்ந்து மதிய போசனம் வழங்கப்படும்.

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2024 22:39)