Mr. Nagalingam Sothinathan

(கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர், கிளிநொச்சி கொத்தணி பாடசாலைகளின் முன்னாள் அதிபர், முன்னாள் பூநகரி கோட்டக்கல்விப் பணிப்பாளர்)

Nagalingam Sothinathan

Date of Birth: 05 April 1938 - Deceased: 22 November 2025

யாழ். ஆலங்குழாய் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், இல- 08, 2ம் குறுக்கு தெரு, கனகபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் சோதிநாதன் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - கதிராத்தை தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராமநாதன் மற்றும் விமலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற சின்னக்குட்டி பாக்கியம் (முன்னாள் ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநிதி, தயாநிதி, கபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷ்யந்தன், பிரதாபன், சிவஞானம், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குமரேசன், தாரணி, சுமுகன், மேதினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-11-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கந்தன்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/11/2025 19:35)