Mr Nagalingam Thangarajah

Nagalingam Thangarajah

Date of Birth: 02 October 1944 - Deceased: 02 October 2026

யாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப்பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரம் மற்றும  திருநெல்வெலியினை வதிவிடமாகவும் கொண்ட திரு நாகலிங்கம் தங்கராஜா அவர்கள் இன்று 02-10-2026ம் திகதி வெள்ள்ளிக்கிழமை அதிகாலை இயற்கை எய்திவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலில்கம் சாந்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சர்வலோகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கமலாதேவி(ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
காலஞ்சென்ற மகேஸ்வரி, மற்றும் இராணியம்மா, கமலாம்பிகை, ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
 
தவரூபன்(CEO, Speed IT Net), நந்தரூபன், கீதலதா( கணக்காய்வு உத்தியோகத்தர் தேசிய கணக்காய்வு அலுவலகம்), கேமலதா( வைத்திய நிபுணர் வவுனியா மாவட்ட வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
அனுசா, ஸ்ரீசுபாகரன்( வைத்திய நிபுணர் அவுஸ்ரேலியா), கலைவினோதன்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
இலட்சியன், ஜானவி, ஸ்ரீலக்ஸ்மன், ஸ்ரீஜதுசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரது இறுதிக்கிரியைகள் 04-10-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் 72 /28, பணிக்கர் ஒழுங்கை திருநெல்வேலியில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக 12:00 மணிக்கு கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!


தொடர்புகளுக்கு:

தவரூபன் மகன் +94 77 756 3213.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/10/2026 15:49)