Mr. Nagalingham Balasubramaniyam
(ஓய்வுபெற்ற ஆசிரியர் - நீர்கொழும்பு விஜயரத்தினம் மகா வித்தியாலயம், கொழும்பு விவேகானந்தா கல்லூரி)
Date of Birth: 19 February 1932 - Deceased: 10 August 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வாழ்விடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற தர்மலிங்கம் - கண்மணி தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சித்திரா, குலேந்திரன், பிரபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வகுமார், சுகிர்தினி, திருலோககுமார் ஆகியோரின் மாமனாரும்,
சிந்தியா, சுவாதி, இந்துப்ரியா, விஷ்ணுர்ஜன், ஆகாஷ், அவினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சுசிலாதேவி, சக்திவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. ஜெயரத்தினம், காலஞ்சென்ற ரஞ்சினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-08-2026 புதன்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-08-2026 வியாழக்கிழமை அன்று நண்பகல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
