திரு. நாகலிங்கம் சின்னையா

நாகலிங்கம் சின்னையா

தோற்றம்: 08 ஜனவரி 1939 - மறைவு: 03 ஜூலை 2026

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகலிங்கம் சின்னையா அவர்கள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான அழகம்மா, துரைசிங்கம், செல்வச் சிரஞ்சீவி, அரியமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மணிவண்ணன் (இத்தாலி), மதனராசன் (ஆசிரியர் - யாழ்.புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்), மனோகரன் (கண்ணன்) ஆகியோரின் நேசமிகு தந்தையும்,

சாந்தினி, சிவாஜினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மதுஷா, தர்சனா, மதுசூதனன், டயானந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-07-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் கரந்தன், நீர்வேலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் சீயாக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2026 00:00)