Mr. Nagalingham Kayilaivasan
(இளைபாறிய தபால் அத்தியட்சகர்)
Date of Birth: 22 November 1933 - Deceased: 28 June 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும், தற்பொழுது இல- 26, குருந்துவத்த வீதி மகாபாகே ராகமயை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் கயிலைவாசன் அவர்கள் 28-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - பொன்னம்மா தம்பதியினரின் புதல்வனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,
Dr. சோபினி (ராகம வைத்தியசாலை), இந்திரவாசன் (Hatton National Bank), இமயவாசன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. விராஜ் (புனர்வாழ்வு வைத்தியசாலை ராகம), நிரோஷா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.அஸ்வினி, Dr.யுவின், ஆகாஷ், வீனித், சித்தார்த், ஆர்த்தி, ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற புஷ்பாவதி, தில்லை ஈசன், மல்லிகாவதி, செல்வநேசன், ஜெயசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் A.F. ரேமன்ட்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-07-2026 புதன்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் திருவுடல் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார். உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- க.இந்திரவாசன் (மகன்)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
