Mr. Nagalingham Ramachandran

(Victory Electricals - உரிமையாளர்)

Nagalingham Ramachandran

Date of Birth: 03 October 1940 - Deceased: 15 September 2025

யாழ். தும்பளையைப் பிறப்பிடமாகவும், இல-15 1/4, இனிசியம் வீதி, தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் இராமச்சந்திரன் அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற நடராஜா - அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

இராமேஷ்வரன், கீதா, அரவிந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

சிவாஞ்சலி, குகன், மாதுமை ஆகியோரின் பிரியமுள்ள மாமனாரும்,

ரவுஷன், ரக்‌ஷா, அஸ்மிதா, கண்ணன், அமலி, அமரிஷ் ஆகியோரின் பாசமுள்ள பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2025 04:00)