Mr Nagalingham Sambasivam
(வர்த்தகர் - கொழும்பு)
Date of Birth: 23 May 1943 - Deceased: 07 February 2026
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் சாம்பசிவம் அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா - வள்ளியம்மை தம்பதியினினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராசபூரணி அவர்களின் அருமைக் கணவரும்,
கவிதா (ஆசிரியை - யாழ். நயினை ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியாலயம்), மயூரன் (ஜேர்மனி), பிரகலாதன் (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சாந்தரூபன் (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் - வேலணை, கனடா), திவ்யா (ஜேர்மனி) சுகன்யா (அமெரிக்கா) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, சிவக்கொழுந்து, சிவப்பிரகாசம் (பிரான்ஸ்), சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணி, சந்திரசேகரம், இராசசேகரம் மற்றும் செல்வபூரணி (கனடா), காலஞ்சென்றவர்களான நவரத்தினம், நடராஜா மற்றும் விஜயகுமாரி, சோமசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகசபாபதி, கமலாசினிதேவி, அரியரட்ணம் (கனடா) ஆகியோரின் சகலனஞம்,
துஷாந், நிஷாந்,கஜித், சஜித், தர்ஜின், திவிசன், ஆதவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது நயினாதீவு இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நயினாதீவு சல்லிப்பரவை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
