திரு. நாகமணி செல்வராசா (செல்வா அண்ணே)

(முன்னாள் பிரதம எழுதுவினைஞர் - உதவி அரசாங்க அதிபர் பணிமனை வேலணை)

நாகமணி செல்வராசா (செல்வா அண்ணே)

தோற்றம்: 28 ஜனவரி 1942 - மறைவு: 27 மே 2024

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நீராவியடி, வேலணை, Toronto-கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகமணி செல்வராசா அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி-அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி (வேலணை பிரபல விஷகடி வைத்தியர்)-அனுஷம்மா (பாம்பக்கா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சாயாதேவி (ஆச்சி) அவர்களின் பாசமிகு துணைவரும்,

ராதிகா (ராதை-கனடா), ராஜ்குமார் (ராஜ்-கனடா), ராஜ்மோகன் (மோகன்-கனடா), ரேணுகா (ரேணு-கனடா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சிவராசா (சிவா-கனடா), லோசனாசியாமினி (செல்வி-கனடா), தேவயாணி (ஜானி-கனடா), மோனதாஸ் (விஸ்வமோகன்-கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், சிவசுப்பிரமணியம், சண்முகரத்தினம் மற்றும் ராஜேந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன், புஸ்பவதி மற்றும் இந்திராணி, தர்மச்செல்வி, காலஞ்சென்ற தற்பராதேவி, வசந்தாதேவி (குஞ்சுக்கிளி-கனடா), சற்குருநாதன் (அப்பு-யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனரும்,

கனகரத்தினம், மங்கைற்கரசி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற கண்ணப்பன் திருமதி நாகேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான தேவராஜா திருமதி. ஆரியமாலா (மாலா), திரு.திருமதி. கந்தசாமி தனலட்சுமி (கனடா), திரு.திருமதி வில்வரெத்தினம் சறோஜா ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

நிவேதனன், நிவேதா, நிதர்சனா, சாயிதன், பிரவீணா, நிலக்சன், சஞ்ஜே, சஞ்சனா, சயானா, கவின், கயலி, இயல் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 29-05-2024 புதன்கிழமை அன்று  மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) என்ற முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 30-05-2024 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.30 மணியளவில் Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada) என்ற முகவரியில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2024 04:00)