திரு நாகமுத்து பாலசுப்பிரமணியம்

நாகமுத்து பாலசுப்பிரமணியம்

தோற்றம்: 10 ஏப்ரல் 1941 - மறைவு: 24 ஜூலை 2026

யூனியன் கல்லூரி பழைய மாணவரும், கிராம சேவகரும், எமது சக வகுப்புத் தோழருமான பாலேந்திரன் அவர்களின் பாசமிகு தந்தையார் திரு. நாகமுத்து பாலசுப்பிரமணியம் (ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர், வவுனியா) அவர்கள், தனது 85 ஆவது வயதில் 24.07.2026 அன்று இறைபதம் அடைந்தார் என்பதை மிகுந்த துயரத்துடன் அறியத்தருகிறோம்.

மாம்பிராய் வீதி, காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார், அமரர்களான நாகமுத்து–நாகம்மாவின் பாசமிகு மகனும்,
 
நாகன்–பொன்னம்மா அவர்களின் மருமகனும்,
 
காலஞ்சென்ற இலட்சுமியின் அன்புக் கணவரும்,
 
ஜெயராணி, ராஜேஸ்வரி, நாகரஞ்சினி, ரகுநாதன், காலஞ்சென்ற சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
அமரர்களான மாணிக்கவாசகர், கதிரவேலு, சின்னராசா, மகேஸ்வரி, சறோஜினிதேவி, புஷ்பராணி ஆகியோரின் மைத்துனரும்,
 
யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான பாலேந்திரன் (89 O/L – 92 A/L - கிராம உத்தியோகத்தர் பலாலி), அமிர்தவாஹினி (97 A/L) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
 
சுகந்ததேவி, ராஜ்குமார் (யாழ்ப்பானம்) ஆகியோரின் மாமனாரும்,
 
வைஷ்ணவி, ராகவி, நதுவர்த்தினி, தரங்கவி, தனுபகன், தருணிகன், நிக்கொவன்ஸ் ஆகியோரின் பேரனும் ,
 
இதழிகாவின் பூட்டனும் ஆவார்.
 
அன்னாரின் மறைவால் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரி சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக 2026.07.24 பிற்பகல் 4.00 மணியளவில் கட்டுபிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்து என்பதை அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு:

பாலேந்திரன்:+94 77 741 2599

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2026 22:22)