Mr. Nagamuthu Balasubramaniyam

(ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர், வவுனியா)

Nagamuthu Balasubramaniyam

Date of Birth: 10 April 1941 - Deceased: 24 July 2026

யாழ். மாம்பிராய் வீதி, காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. நாகமுத்து பாலசுப்பிரமணியம் அவர்கள் 24-07-20206 வௌ்ளிக்கிழமை தனது 85 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து - நாகம்மா தம்பதியினரின் பாசமிகு மகனும், நாகன் - பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், 

ஜெயராணி, ராஜேஸ்வரி, நாகரஞ்சினி, ரகுநாதன், காலஞ்சென்ற சரோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், கதிரவேலு, சின்னராசா, மகேஸ்வரி, சறோஜினிதேவி, புஷ்பராணி ஆகியோரின் மைத்துனரும், 

பாலேந்திரன் (கிராம உத்தியோகத்தர் - பலாலி), அமிர்தவாஹினி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், 

சுகந்ததேவி, ராஜ்குமார் ஆகியோரின் மாமனாரும், 

வைஷ்ணவி, ராகவி, நதுவர்த்தினி, தரங்கவி, தனுபகன், தருணிகன், நிக்கொவன்ஸ் ஆகியோரின் பேரனும்,

இதழிகாவின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-07-2026 வௌ்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கட்டுபிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

பாலேந்திரன்:- +94 77 741 2599

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/07/2026 00:00)