Mr. Nagan Sinnaiya
(K-Maart - உரிமையாளர்)
மாத்தளையைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகன் சின்னையா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சீதா அவர்களின் அன்புக்கணவரும்,
சந்திரபோஸ், தனபாக்கியம் (கொழும்பு), காமாச்சி, சொர்ணம் (இந்தியா), காலஞ்சென்ற வளவையா லச்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
உஷா, மலர்விழி, பூங்கோதை, கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் தந்தையும்,
சண்முகமூர்த்தி, ரவிச்சந்திரன், லஷ்மிகாந், சித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிதுலா, ஷாரிஸ், சிந்துஜா, நிவேதித்தா, சந்தோஷ், சாருக்ஷன், அகிலேஷ், சபினாஷ் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை (VIP Parlour) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, 03-04-2024 புதன்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
