திரு. நாகன்சோமசுந்தரம் (சுந்தரம்)
(தொர்சி தமிழ்ச்சோலைப் பள்ளியின் முன்னாள் நிருவாகி)
தோற்றம்: 29 மே 1951 - மறைவு: 18 மே 2026
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகன் சோமசுந்தரம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகன் - பொன்னி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிட்டிணர் - சோதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, கதிராசிப்பிள்ளை மற்றும் அன்னம்மா, கைலாயதேவி, கோபாலக்கிருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சர்வேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கீதன், விஜிதா, ஜெசிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லக்ஷ்மி, கிருஷ்ணா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
ஓவியா, ஆதிவ், மயிலி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
செல்வி, மானா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-05-2026 வியாழக்கிழமை அன்று மதியம் 1:00 - பிற்பகல் 2:15 மணி வரை Crématorium de Champigny (560 Av. Maurice Thorez 94500 Champigny-sur-Marne, France) இல் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
