திருமதி. நாகபூசணி (தேவி) கிருஸ்ணசாமி

நாகபூசணி (தேவி) கிருஸ்ணசாமி

மறைவு: 27 ஏப்ரல் 2025

யாழ். வல்வெட்டியினை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. நாகபூசணி கிருஸ்ணசாமி அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி அவர்களின் அன்புத் துணைவியாரும்,

கமலன் (இலண்டன்), சிவாளினி (இலண்டன்),  நளினி (சுவிஸ்) ஆகியோரது அன்புத் தாயாரும், 

காலஞ்சென்றவர்களான குணரட்ணம், செல்லத்துரை மற்றும் Dr.சிவபாதசுந்தரம் (இலண்டன்),  காலஞ்சென்ற மகாலிங்கம், குமாரசாமி (ஜேர்மனி), நாகேஸ்வரி, ராஜினிதேவி (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு 29-04-2025 செவ்வாய்க்கிழமை வல்வெட்டியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2025 04:00)