திரு. நாகப்பர் குழந்தைவேலு
மறைவு: 24 அக்டோபர் 2025
முல்லைத்தீவு - முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகப்பர் குழந்தைவேலு அவர்கள் 24-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகப்பர் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற இரத்தினசிங்கம் - கண்ணகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நாகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி, அன்னப்பிள்ளை, செல்லையா, இரத்தினம், சரஸ்வதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,
காலஞ்சென்ற சோதிலட்சுமி, தர்மலிங்கம், காலஞ்சென்ற மங்கையற்கரசி, நவரத்தினம், காலஞ்சென்ற இராசரத்தினம், செவ்வந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரோஜினிதேவி, இராஜேஸ்வரி, ஸ்ரீதரன் (கனடா), புவனேஸ்வரி, கமலேஸ்வரி, ஈஸ்வரி, கருணாகரன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரம், சூரியகுமார், திகல்மதி, செந்தில்ராஜா, மனோகரன் (ஆசிரியர் - கிளி. இயக்கச்சி மகா வித்தியாலயம்), கௌசல்யா (பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜீவநந்தினி (பிரான்ஸ்), வாசுகி (இலண்டன்), ஜீவரஞ்சன் (பிரான்ஸ்), தர்சிகா, டிலக்ஷன், கீர்த்தீகன், நிவேதிகன் (ஜேர்மனி), சங்கவி, அஜிந்தா (யாழ். பல்கலைக்கழகம்), கிளிநொச்சி மகா வித்திய மாணவிகளான (சிந்துஜா, மயூரி, சஹானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரணி, அகரன், தனிஷ், அஹானா, பவினேஸ், அஹிஸ், அக்ஸிகா ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-10-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கற்பூர புல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
