திரு. நாகராஜா பாக்கியலட்சுமி

நாகராஜா பாக்கியலட்சுமி

தோற்றம்: 15 ஜூன் 1946 - மறைவு: 13 ஆகஸ்ட் 2025

யாழ். வேலணை 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகராஜா பாக்கியலட்சுமி அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சின்னராசா, நமசிவாயம், சேனதிராஜா, அன்னலட்சுமி மற்றும் ராசலட்சுமி (டென்மார்க்), சரஸ்வதி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பகீரதி (பிரான்ஸ்), இராஜகுமாரி (இலங்கை), இராஜகுமார் (இலங்கை), சுபீகரன் (பிரான்ஸ்), இராஜதேவி (இலங்கை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

சூரியகுமார் (பிரான்ஸ்), சிவசோதி (இலங்கை), கல்பனா (இலங்கை) ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, செல்லத்துரை, இரத்தினம், மனோன்மணி, கண்மணி ஆகியோரின் மைத்துனியும்,

கார்த்திகன், கதிர்சன், கபிலன், டனுசிகா, வதுசிகா, தினோஜன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,

அபிலாஷ், ஆதிரன் ஆகியோரின் அருமை அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-08-2025 வெள்ளிக்கிழமை மற்றும் 16-08-2025 சனிக்கிழமை முற்பகல் 10:00 - 5:00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:30 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2025 04:00)