திருமதி. நாகராஜா பாலசரஸ்வதி
தோற்றம்: 12 ஜூலை 1939 - மறைவு: 20 ஜனவரி 2026
யாழ். கரம்பன் மேற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகராஜா பாலசரஸ்வதி அவர்கள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - அன்னம்மா தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
ராதை (சுவிஸ்), வித்தியா (இலண்டன்), பாரதி (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
வசந்தன் (இலண்டன்), சிறி (சுவிஸ்), ராச் (ரஞ்சன் - அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்கந்தராஜா (சிறி - கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி கிருபாம்பிகை, சிவகாமசுந்தர (அம்பிகா), வாமதேவன் ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி, முத்துகுமாரசாமி, கந்தையா, காலஞ்சென்ற அருந்ததிநாயகி, செல்வநாயகி (கனடா), ஜீவநாயகி (யாழ்ப்பாணம்), யோகராணி (கனடா), காலஞ்சென்றவர்களான விமலாதேவி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
சுப்ரீத்தி, சோபியா, சிந்தியா, தானியா, கிசோரி, சிவானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜய்டனின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 - 8.00 மணி வரை Asian Funeral Care (35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, UK) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 26-01-2026 திங்கட்கிழமை நண்பகல் 12.00 - 2.00 மணி வரை Hendon Cemetery & Crematorium (Holders Hill Rd, London NW7 1NB, UK) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.40 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
