Mrs. Nagarajah Saraswathy
Deceased: 18 November 2026
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாகராஜா சரஸ்வதி அவர்கள் 18-11-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னுச்சாமி - முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
சுதன், கரன், தர்ஷன் (கிராம சேவை உத்தியோகத்தர், ஊர்காவற்றுறை பிரதேச செயலகம்), தர்ஷினி (ஆசிரியை - புத்துவெட்டுவான் அ.த.க பாடசாலை), சுதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனுசா, ஸ்ரீப்பிரியா, இராஜலட்சுமி (கணக்காளர், பிரதேச செயலகம் காரைநகர்), ஜீவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திசானி, கர்னிகா, கஸ்வின், லட்சயன், கேசிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, நவரத்தினம், சோதிநாதன் மற்றும் திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இரத்தினம், கனகமணி, மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
