Mr. Nagarajah Ganapathy

Nagarajah Ganapathy

Date of Birth: 31 October 1948 - Deceased: 02 November 2024

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகராஜா கணபதி அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி-லக்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முருகேசு-நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜலஷ்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், மகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திசா, லஜீபன், மதுரா, றஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாஸ்கரன், திஸானா, நவதர்சன், காண்டீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென் மேரி மார்கிரட், பொன்னுத்துரை, விஜயராணி, தியாகலிங்கம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், புவனேந்திரன், புஸ்பதேவி, காந்தீஸ்வரி, இரவீந்திரன், நேமிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜீசன், கவிஷா, ஆத்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 06-11-2024 புதன்கிழமை காலை 8.00-9.00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து முற்பகல் 11.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.    

ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2024 05:00)