Mr. Nagarathinam Mahendralingam
Deceased: 15 November 2025
யாழ். சுழிபுரம் சந்தி நெல்லியான் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொடடாஞ்சேனையை தற்காலிக வசிப்பிடமாகவும் வாணி புடவையகம், கொழும்பு, கொம்பனி வீதி முன்னாள் உரிமையாளருமான திரு. நாகரத்தினம் மகேந்திரலிங்கம் அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் - தங்கம்மா தம்பதியரின் தவப்புதல்வனும், சுழிபுரம் கிழக்கு சத்தியகாடு காலஞ்சென்ற பொன்னையா - செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மகாலக்சுமி, மகாதேவி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகொதரரும்,
விஜயலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேத்தினி அவர்களின் பாசமிகு தகப்பானாரும்,
நடேசபிள்ளை (கிளிநொச்சி), கணேசகுமார் (சுவிஸ்), காலஞ்சென்ற இராசேந்திரம், இராசலெட்சுமி, வடுதலட்சுமி, இராசன், தனலச்சுமி (பிரான்ஸ்), சுலோசனாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுதாகரன் (லண்டன்), கமலாகரன் (விளான்), ஜசினா (சுவிஸ்), ஜலசா, ஜசிக்கா ஆகியோரின் தாய்மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 17-11-2025 திங்கட்கிழமை காலி வீதி, கல்கிசையிலுள்ள மஹிந்த மலர்ச்சாலையில் காலை 10:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2:00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- விஜயலெட்சுமி(மனைவி)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
