Srimathi. Nagarathna Iyar Egathambigai
Deceased: 30 March 2025
யாழ். புளியங்கூடல் பூர்வீகமாகவும் இணுவில், துன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. நாகரெத்தின ஐயர் ஏகதாம்பிகை அவர்கள் 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரக் குருக்கள் - குப்புலடசுமி அம்மா தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்ற நாகரெத்தின ஐயர் அவர்களின் துணைவியாரும்,
சிவஸ்ரீ ஹரீந்திரக்குருக்கள் (கனடா), சிவஸ்ரீ குகேந்திரக்குருக்கள் (இலண்டன்), சிவஸ்ரீ கலாதரக்குருக்கள் (ஆசிரியர்-துன்னாலை) ஆகியோரின் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
