Mr. Nagendthirar Maruthalingham
Date of Birth: 16 May 1935 - Deceased: 01 October 2025
யாழ். நெடுந்தீவை பிறப்புடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும், சுண்டுக்குழி, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகேந்திரர் மருதலிங்கம் அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரர் (நிறதூளி) - இராமாசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (வேலப்பா) - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா (சுந்தரவல்லி) அவர்களின் அன்புக் கணவரும்,
வர்னேந்திரா (கொழும்பு), குகனேந்திரா (கனடா) ஆகியோரின பாசமிக்க தந்தையும்,
மஞ்சீளா, வானதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி (தர்மலிங்கம்), அமிர்தம், இராசமணி, தங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
சந்திரசேகரம், பூபாலசிங்கம், மயில்வாகனம், யுகராஜா, காலஞ்சென்ற நடராஜா (நடேசு), கணபதிப்பிள்ளை, குகநேசன் (சேகர் & பிறதர்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
ராகுல் மருதி, நிவிதா, வினித்தா, மருதலிங்கசிபி, ஆனந் த், இலக்கியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 06-10-2025 திங்கட்கிழமை மதியம் 1:00 - 2:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
