Mr. Nageswaran Paramalingham

Nageswaran Paramalingham

Date of Birth: 20 August 1974 - Deceased: 11 April 2025

யாழ். ஊர்காவற்றுறை கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பன் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகேஸ்வரன் பரமலிங்கம் அவர்கள் 11-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் - பராசக்தி தம்பதியினரின் அன்பு மகனும்,

சரவணமுத்து - காலஞ்சென்ற சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீபன், சஜீபன் ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,

பத்மாதேவி, பரமநாதன், பரமேஸ்வரி, பரம்சோதி, பார்வதி, இரத்தினேஸ்வரி, விமலாதேவி, பவானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறீகரன், தியாகரன், சுவிதா, துஸ்யந்தன், ரவிகரன், பிரதீபன், திவ்வியா, டிலக்‌ஷிகா ஆகியோரின் பாசமுள்ள சித்தப்பாவும்,

காயத்திரி, சுகிதா, சுதர்ஷன், சுதர்சா, மதுர்சன், சுலக்‌ஷன், ராஜ்குமார், தனுசிகா, ராஜ்மோகன், விஜயகுமார், மயூரன், வினோத், வருணிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-04-2025 சனிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் கரம்பன் மேற்கு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/04/2025 04:00)