Mrs. Nageshwary Sabanathan
Date of Birth: 17 September 1950 - Deceased: 29 January 2026
யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வவுனியா - 2ம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி சபாநாதன் அவர்கள் 29-01-2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - பொன்னம்மா தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - மகேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சபாநாதன் (City Trade Corporation- உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுகந்தினி, குமுதினி, கலாஜினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
நவரட்ணராஜா, ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திவ்யா, அருண், மாதங்கி, செந்தூரன், காயத்ரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
