திருமதி. நாகேஸ்வரி செல்வராசா

(ஓய்வுபெற்ற ஆசிரியை - யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி, முன்னாள் கனடா தமிழீழச் சங்கத்தின் பயனாளிகளின் சட்டத்தேவைகளுக்கான ஆலோசகராகவும் (Retainment Case worker))

நாகேஸ்வரி செல்வராசா

தோற்றம்: 19 டிசம்பர் 1938 - மறைவு: 13 செப்டம்பர் 2026

யாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், ரொரன்ரோ-- கனடாவை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. நாகேஸ்வரி செல்வராசா அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்-தங்கம்மா தம்பதியினரின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்றவ்களான இளையதம்பி-சரஸ்வதி தம்பதியினனின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் (ஆரம்பகால உலகத்தமிழர் இயக்கத்தின் செயற்பாட்டாளர், ஆசிரியர்) அன்பு மனைவியும், 

இராமகிருஷ்ணன், லக்ஷ் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கிருத்திகா, ரமணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விஸ்வாமித்திரன், மைத்ரேயி, ஹரன், சகானா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,

மூர்த்தி, ஆனந்தன் அவர்களின் அருமைச் சகோதரியும்,

சாவித்திரியின் அன்பு மைத்துனியும்,

ராம்மோகன், துஷியந்தி, பரத்மோகன் ஆகியோரின் ஆசை மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று 5:00 மணி - 9:00 மணி வரையும், 16-09-2026 புதன்கெழமை நண்பகல் 12:00 - 1:00 மணி வரையும் செயின்ட் ஜான்ஸ் டிக்ஸி கல்லறைத் தோட்டம் மற்றும் சுடுகாடு, 737 டண்டாஸ் தெரு கிழக்கு, மிஸ்ஸிசாகா, ஒன்டாரியோ, L4Y 285 நடைபெற்றது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2026 00:00)