திருமதி. நாகேஸ்வரி ஸ்ரீ பத்மநாதன்

நாகேஸ்வரி ஸ்ரீ பத்மநாதன்

தோற்றம்: 03 டிசம்பர் 1937 - மறைவு: 06 ஜூன் 2025

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி ஸ்ரீ பத்மநாதன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம் ஸ்ரீ பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதி, மகேஸ்வரி, சிவராஜா மற்றும் புவனேஸ்வரி இராசையா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜோசப், பத்மாவதி மற்றும் கமலேஸ்வரி (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

சத்தியேந்திரன் (கனடா), சுவேந்திரன் (டுபாய்), சத்தியபாமா (இலண்டன்), காலஞ்சென்ற பரமேந்திரன், ஞானேந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருபாலனி (கனடா), தங்கராஜா (இலண்டன்), செல்வி (டுபாய்), நிரஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆரணி, அர்த்தனா ஆகியோரின் அம்மம்மாவும்,

நிரோஷன், நிதர்ஷன், நிவேதா, ஜெய்தா, மேக்கா, நயன்தா ஆகியோரின் அப்பம்மாவும்,

தாமிரா, ஆதிரா, விஹான், திரிஷாரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-06-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று,  முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium 2 (Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2025 04:00)