Mrs. Nageswary Rasaratnam

(முன்னாள் உடுப்பிட்டி இமையாணன் மேற்கு மாதர் சங்க ஸ்தாபகர்)

Nageswary Rasaratnam

Date of Birth: 22 April 1936 - Deceased: 07 March 2026

 யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா - Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நாகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 07-03-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

வரேந்திரன், பவானி, சிவேந்திரன், நிலானி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தருமலிங்கம், கௌசலாதேவி, மார்க்கண்டு, சிவராஜா, அன்னராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பூமலர், குணவதி, அருளாநந்த வடிவேல் ஆகியோரின் மைத்துனியும்,

சிவதாசன், உதயசங்கர், சுமதி, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வதனி, கயேந்திரன், அபிராமி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

திவாகரன், தர்சினி, துவாகரன், பகீரதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினிதா, அருண்குமார், நிலக்‌ஷன், டேனா, பாகேசன், தினேசன், ஹரிஷன், லக்‌ஷனா, வருணன், கிருஷ்ணி, ரேயான்சிகா, வினோஜன், பானுஜன், வைஷ்ணன், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-03-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 15-03-2026 காலை 7:30 - 8:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் Highland Hills Funeral Home and Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/03/2026 00:00)