Mrs. Nageswary Thiyagarajah

Nageswary Thiyagarajah

Date of Birth: 27 June 1942 - Deceased: 25 January 2025

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் - கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

S.K.தியாகராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தயாளினி, சுபாதினி, காலஞ்சென்ற குபேரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவா, கண்ணன் ஆகியோரின் அன்பு மாமியும்,

காயத்திரி, கஸ்தூரி, கபிலன், ஜனனி, கார்த்திகேயன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நித்தியலெட்சுமி, காலஞ்சென்ற இந்திராணி, நித்தியானந்தன், ஜெயானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தங்கராஜா, செல்வநாயகம், ஆனந்தராஜா மற்றும் சிவராஜா, காலஞ்சென்ற கந்தசாமி, கணேசபிள்ளை, பாலாம்பிகை, ராதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-02-2025 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 - 10.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் புகழுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2025 05:00)