திரு. நாகலிங்கம் முத்தையா (முத்து)

(ஓய்வுபெற் இலிகிதர்)

நாகலிங்கம் முத்தையா (முத்து)

மறைவு: 12 ஜனவரி 2026

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு மற்றும் இல-44, அச்சுக்கூட வீதி, கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நாகலிங்கம் முத்தையா அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நாகலிங்கம் - அமராவதி தம்பதியினரின் மகனும், வேலாயுதம் - சின்னத்தங்கம் தம்பதியினரின் மருமகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சண்முகநாதன், அன்னமுத்து, செல்லத்துரை, மார்க்கண்டு ஆகியோரின் உடன்பிறந்த சகோதரனும்,

அருள்மொழி, கௌரீசன், சபேசன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

கனகரத்தினம், கௌரி, பிரேமினி ஆகியோரின் மாமனாரும்,

மயூரன், ஹரிணி, ஹரித்திரா, ஆரபி, அக்‌ஷயன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2026 00:00)