Mr. Nagulesapillai Thushyanthan
Date of Birth: 22 April 1933 - Deceased: 14 August 2022
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், கொழும்பு- 12, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நகுலேசபிள்ளை துஷ்யந்தன் அவர்கள் 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, ஆச்சிமுத்து தம்பதிகளின் மூத்த பேரனும்,
காலஞ்சென்ற நகுலேசபிள்ளை, சுந்தரம் தம்பதிகளின் மூத்த புதல்வரும்,
காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
எழிலி, மைதிலி, மாலினி, மனோகரி, திவாகரன், சுமதி, சாம்பவி, காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சசீந்திரன் மகாலிங்கம், அகஸ்தியா நரேந்திரநாதன், சுரேஷ் வாமதேவன், சிவானந்தி திவாகரன், நந்தகுமார் பாலகிருஷ்ணன், ரேகா காண்டீபன் ஆகியோரின் மாமனாரும்,
ஆரணி, ஆருதி, ஜீவகன், உமையாள், ஆரபி, வராகி, டேவேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற உமாபதிசிவம், ஸ்ரீதேவி கணபதிப்பிள்ளை (கனடா), காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, நற்றமிழ்மாது ராஜகோபால் (கனடா), ஸ்ரீதரன் (கனடா), சுயம்புலிங்கம் (கனடா) ஆகியோரின் பெரியண்ணாவும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், இராசையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
www.tamilthakaval.org
