Mrs. Nakuleswary Vijayaratnam
Date of Birth: 04 July 1929 - Deceased: 07 November 2025
யாழ். கொக்குவில் மஞ்சவனபதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நகுலேஸ்வரி விஜயரட்ணம் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் 12:30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகைசு தம்பு - சின்னாச்சிபிள்ளை தம்பதியினரின் அருமை மகளும்,
காலஞ்சென்ற செட்டித்தெரு விஜயரட்ணம் அவர்களின் அன்புக்கணவரும்.
ராஜகுமார், லோகநாதன், சண்முககுமாரன், பிரபாவதி, காலஞ்சென்ற ரதி, மஞ்சுளா, அரவிந்தன் ஆகியோரின் பாசமிக்க அன்னையும்,
தெய்வீஸ்வரி, நளாயினி, குமுதினி, ஜீவானந்தன், தங்கமயில், ரவீந்திரன்பிள்ளை, கல்பனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்பு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-11-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
