திருமதி. நளினி சிவகுமார் (இராணி)
(கனடா TVI தொலைக்காட்சி சேவையாற்றியவர்)
தோற்றம்: 07 மே 1955 - மறைவு: 02 ஜனவரி 2024
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, Markham கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நளினி சிவகுமார் அவர்கள் 02-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மருத்துவர் குமாரவேலு நமசிவாயம் (திருநெல்வேலி) - செல்லத்துரை தனலஷ்மி (அதிபர்-சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி) தம்பதியினரின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற அழகையா (நீர்கொழும்பு - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிவகுமார் (முன்னாள் வர்த்தகர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
கிருத்திகா, துர்க்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாதவன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ராஜகுமாரன் (ராசன் - பிரித்தானியா), ரஜனி (இலங்கை) பத்மினி (கலா நடன ஆசிரியை - பிரித்தானியா), ஶ்ரீகுமார் (ஐக்கிய அமெரிக்கா), ஆனந்தகுமார் (ஜேர்மனி), ரமணி (அவுஸ்திரேலியா), சூரியகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஜயரட்ணம், குணசீலன், தேவகி, அருளேஸ்வரி, Dr. துஷ்யந்தகுமார், சாந்தி ,ஶ்ரீகுமாரன், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனினும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
