திரு. நல்லையா ராஜரட்ணம்
(ஓய்வு பெற்ற இலங்கை வங்கி உத்தியோகத்தர்)
மறைவு: 20 ஜூலை 2025
யாழ். புன்னாலைக்கட்டுவனை பிறப்பிடமாகவும், கலட்டி வீதி, கோண்டாவில் மேற்கினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா ராஜரட்ணம் அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா - கண்மணி தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற தம்பிராஜா - ரத்தினேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
நாகயசோதாதேவி (யசோ) அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபா, பிரகாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜகுமார், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விஷ்ணுகா, தரணிகா, எழிலினி, ஹரிஷ்ணவி ஆகியோரின் பேரனும்,
அன்னலட்சுமி, செல்வரட்ணம், விஜயரட்ணம், பாக்கியலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
தயாபரன், சரோஜாதேவி, பத்மதேவிகா, கிருஷ்ணகுமார், ஜகதீஸ்வரி, கேதீஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-07-2025 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது கோண்டாவில் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
