திரு நல்லதம்பி அன்ரனி

நல்லதம்பி அன்ரனி

தோற்றம்: 22 ஜூன் 1944 - மறைவு: 23 நவம்பர் 2023

திருகோணமலை மூதூர் உப்பாறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி அன்ரனி அவர்கள் 23-11-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி சுவாதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வஸ்தியாம்பிள்ளை அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றோசலின் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயக்கிற்ஸ்டி (பிரித்தானியா), ஜெயலிண்டா (பிரித்தானியா), ஜெயக்குமார், ஜெயக்காந் (மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கி.மா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சற்குணராஜா (பிரித்தானியா), சுகன்யா (பிரித்தானியா), உதயச்சந்திரா, நிந்துஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, தம்பிப்பிள்ளை மற்றும் இராசம்மா, திரேசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மேரிதிரேசா (பவளராணி), அந்தோனிப்பிள்ளை, அன்ரன் மற்றும் புலோமினா (அன்னரத்தினம்), அல்பிரட் (குணசிங்கம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விதுஷன் (பிரித்தானியா), சதுஷனா (பிரித்தானியா), நிவேதன் (பிரித்தானியா), சதுஷன் (பிரித்தானியா), டான்சி (பிரித்தானியா), கிறிஸ்மன் (இலங்கை), திவிஷா (இலங்கை) மதிஷ்மன் (இலங்கை), பவிக்‌ஷன் (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27-11-2023 திங்கட்கிழமை அன்று முற்பகல் 09:30 மணியளவில் புனித மரியாள் பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/11/2023 05:00)