Mrs. Nallathambi Manonmani
Deceased: 02 July 2026
யாழ். காரைநகர் நடுத்தெருவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு -15 மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. நல்லதம்பி மணோன்மணி அவர்கள் தனது 103வது வயதில் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
திருக்குமாரன் (கனடா), இரஞ்சிதமலர் (கொழும்பு), இராசமலர் (வசந்தா - இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அருளையா, அருளம்மா, நேசம்மா, இராசரத்தினம், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மோதரை (காக்கைத்தீவு) அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1.00 மணிளவில் திருவுடல் கொழும்பு மாதம்பிட்டிய பொது மையானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
