Mr. Nallathamby Balasubramaniyam
(Liberty Hardware - Koslanda)
Date of Birth: 22 February 1958 - Deceased: 13 October 2025
இந்தியா - திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி கிராமம், எதுமலுடையான் கோத்திரம், இரத்தினபுர - கொஸ்லந்தையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. நல்லதம்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 13-10-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1.15 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஹல்துமுல்லை சிதம்பரம்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,
துளசிவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
கோகுல், லஷாணி, டினுபாரத் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சுசீலா, காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை, சரஸ்வதி, தனம், பத்மினி ஆகியோரின் சகோதரரும்,
சண்முகநாதன் (ஹல்துமுல்லை) மாப்பிள்ளையும்,
கிருஷ்ணவேணி (நில்லம்பை - கலஹா) மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மகாலிங்கம் (அம்பிட்டிய), பத்மநாதன் (கொழும்பு), இராமசாமிபிள்ளை (கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கனகவிஜயன் (நில்லம்பை - கலஹா) அவர்களின் சகலையும்,
மகாலட்சுமி (கல்கிசை) அவர்களின் கொழுந்தனரும் ஆவார்.
அன்னார் இறுதி நிகழ்வுகள் கொஸ்லந்தை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 15-10-2025 புதன்கிழமை அன்று மதியம் 1.45 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் ஹல்துமுல்லை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
