திரு. நல்லதம்பி மயில்வாகனம்

நல்லதம்பி மயில்வாகனம்

தோற்றம்: 04 நவம்பர் 1943 - மறைவு: 02 பெப்ரவரி 2025

யாழ். மீசாலை வடக்கு மீசாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி மயில்வாகனம் அவர்கள் 02-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - ராசம்மா தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - அன்னம்மா தம்பதியிரனன் மருமகனும்,

உதயகுமார் (இலண்டன்), உதயமலர், உதயராணி, சிவகுமார், சசிக்குமார் (சுவிஸ்), கருணகுமார் (பிரான்ஸ்), ஆனந்தகுமார், சசிகரன் (இலணடன்), தர்சினி (பிரான்ஸ்), தனுசா (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவறஞ்சினி, ரவிக்குமார் காலஞ்சென்ற மதிவதனராசா, இளவேணி, சங்கிதா, சர்மிளா, நிதி, காயத்திரி, கேசவன், கலைவாணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுசா - வைஸ்ணவன் (ஹொலண்ட் ), யதுசன் - சஞ்சயா, லாவணியா - கஜல், காலஞ்சென்ற துசாந்தன், சோபனா - யசன் (பிரான்ஸ்), டிசாந்தன் - மிதுசா (இலண்டன்), மதுசூதனன், மதுகோபி (பிரான்ஸ்), தினேஸ், மதுரா (யா.ப.க.கழகம்), மதுசுஜா (யா.ப.க.கழகம்) - நயூத்திரன், மதுனியா, நிமல்ராஜ் (பிரான்ஸ்), ராஜ்குமார் (பிரான்ஸ்), பிரதிபன், சாரா (சுவிஸ் ப.க.கழகம்) ஷமீரா (சுவிஸ் ப.க.க.கழகம்), அபிசா, அபினா, அபிஷ், நிலோஜன், அக்சனா, டிலக்சனா, அஸ்வின், அட்சயா, ஜஸ்மிகா, மிதுனா, பிரியந்தி ஆகியோரின் அன்புப் பேரனும்,

லியானா, ஆதித் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

கணபதிப்பிள்ளை, வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச்  சகோதரனும்,

சிவப்பிரகாசத்தின் அன்பு மைத்துனனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-02-2025 புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மீசாலை வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/02/2025 05:00)