திரு. நல்லதம்பி நந்தகுமாரன்

நல்லதம்பி நந்தகுமாரன்

தோற்றம்: 01 ஏப்ரல் 1967 - மறைவு: 14 பெப்ரவரி 2022

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட​ நல்லதம்பி நந்தகுமாரன் அவர்கள் 14-02-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு கனிஷ்ட​ புதல்வரும்,

காலஞ்சென்ற​ பெரியகறுப்பாபிள்ளை, சிவஜோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனஜா (வனசா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீணா, மதுரா, டிவீணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நந்தினி, செல்வகுமார், குசேலினி, கலாயினி, தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுசீலா, சிவகுமார், விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்கந்தராஜா, சுகந்தினி, தில்லைநாதன், பிரேமலிங்கம், இந்திராணி, காலஞ்சென்ற​ வேணுகோபால் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சர்மிளா, சாரா, சயன், ஜீவிதன், சஞ்ஜீவன், ஜெரமையா, ஜெனே, ஆனந்தபாபு, தில்லைசௌந்தரி, தில்லைபாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிலக்ஷி், சிவசங்கர், சோபனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2022 17:20)