Mr. Nallathamby Ponnampalam
(Conductor C T B Kilinochchi)
Date of Birth: 30 August 1936 - Deceased: 10 June 2024
யாழ்ப்பாணம் மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இல 5/94 மகளீர் திட்டம் திருவையாறைத் தறகாலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி பொன்னம்பலம், முன்னாள் பேருந்து நடத்துனர் இ.போ.ச(கிளிநொச்சி) அவர்கள் நேற்று 10-06-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நல்லம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியை யா /மீசாலை விக்கினேஸ்வரா மத்திய வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சரஸ்வதி மற்றும் வீரசிங்கம், தியாகராசா. தவராணி, வன்னியசிங்கம், நவரத்தினம், செல்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான யோகாம்பிகை, சண்முகம், அன்னலட்சுமி, சரஸ்வதி, செல்வரத்தினம், நல்லதம்பி, தாமோதரம்பிள்ளை, தங்கம்மா, கிருஷ்ணசாமி மற்றும் சுவர்ணா, சகுந்தலாதேவி, கணேசநாதன், செல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் திருவையாறு இல்லத்தில் இன்று 11-06-2024ம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்று முற்பகல் 11:30 மணியளவில் இரணைமடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
ந. வன்னியசிங்கம் சகோதரன்
(ஓய்வுபெற்ற எழுதுநர் வலயக்கல்வி
அனுவலகம் கிளிநொச்சி)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/06/2024 23:53)
