திரு. நல்லதம்பி தர்மராஜா

(பிரபல வர்த்தகர்)

நல்லதம்பி தர்மராஜா

தோற்றம்: 14 டிசம்பர் 1953 - மறைவு: 03 ஜனவரி 2026

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி தர்மராஜா அவர்கள் 03-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கொழும்பு ஐந்துலாம்புச்சந்தி  பிரபல வர்த்தகர் வெண்கலக்கடை காலஞ்சென்ற நல்லதம்பி - கண்ணம்மா தம்பதியினரின் புதல்வரும்,

புங்குடுதீவு குறிகாட்டுவான் திருநா உணவக உரிமையாளர் காலஞ்சென்ற திருநாவுக்கரசு - பராசக்தி தம்பதியினரின்  மருமகனும்,

நந்தினி அவர்களின் அன்பு கணவரும்,

லாவண்யா, குபேரன், தர்மிதா, சுசேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

திலீபன், திருமால், கீதிகா உதாசினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சீரோன், விஜேன், துஷான், கீரன், அதீரன், ஸ்ரேயா ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, அம்பிகாதேவி மற்றும் பிறேமாவதி (கமலா), தவமணிதேவி (கௌரி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சண்முகரத்தினம், சிவநாதன் மற்றும் குணரட்ணம், நாகேஸ்வரன், சரோஜாதேவி, சந்திரவதனி, சோதிகலா, அருட்செல்வி, ரேணுகா காலஞ்சென்ற தருணேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 05-01-2026 திங்கட்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில்  பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/01/2026 07:35)