திரு. நல்லதம்பி தேவநாயகம்பிள்ளை

(ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி)

நல்லதம்பி தேவநாயகம்பிள்ளை

தோற்றம்: 09 செப்டம்பர் 1929 - மறைவு: 16 ஜனவரி 2026

மட்டக்களப்பு - ஆரையம்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி தேவநாயகம்பிள்ளை அவர்கள் 16-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் - பார்வதிபிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

தேவமனோகரி (வைத்தியர், இலண்டன்), ஜெயசீலன் (பொறியியலாளர், அவுஸ்திரேலியா), சந்திரிகா (ஓய்வுபெற்ற ஆசிரியர்), சாந்தக்குமார் (இந்தியா), யாழினி (வைத்தியர், அமெரிக்கா) ஆகியோரின் பாசமுள்ள தந்தையும்,

ரவிந்திரன் (கணக்காளர், இலண்டன்), நளாயினி (கால்நடை வைத்தியர், அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சூரியகுமார் (ஓய்வுபெற்ற தொழில் நீதிமன்ற நீதிபதி), விக்னகுமார் (விஷேட சத்திரசிகிச்சை நிபுணர், அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கோணலிங்கம், மகேஸ்வரி, கிருஷ்ணபிள்ளை, தியாகராஜபிள்ளை, இராஜரெத்தினம் மற்றும் திலகவதி, கங்காதரலிங்கம் (PHD, அமெரிக்கா) ஆகியோரின் சகோதரரும்,

கிருபைராணி, வத்சலா, மாலா (அமெரிக்கா), ராஜலெட்சுமி, காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, வாமதேவன், ஈஸ்வரி, பவளம், மாதவுபுவனேஸ்வரன், மகாலிங்கசிவம், சாம்பவதேவி, மகேந்திரலிங்கம் (வைத்தியர்) ஆகியோரின் மைத்துனரும்,

ஜனார்த்தனி (கணக்காளர், இலண்டன்), ரஷ்னி (வைத்தியர், இலண்டன்), காயத்திரி (அவுஸ்திரேலியா), மர்யாஹர்ஷினி (கால்நடை வைத்தியர், காத்தான்குடி), சத்தியஷாகர் (பொறியியலாளர், அவுஸ்திரேலியா), திருஷன் (வைத்தியர், அமெரிக்கா), சுபீஷன் (பல் வைத்தியர், அமெரிக்கா), மொஹானிஷன் (அமெரிக்கா) ஆகியோரின் பாசமிக்க பாட்டனாரும்,

இவான், விகாஷினி ஆகியோரின் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனைகள் 19-01-2026 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் சரீரம் ஆரையம்பதி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/01/2026 00:00)