Mr. Nallathampi Sivalingham

(முன்னாள் பொது முகாமையாளர் - சுன்னாகம் ப.நோ.கூ. சங்கம்)

Nallathampi Sivalingham

Date of Birth: 12 August 1941 - Deceased: 07 July 2025

யாழ். குப்பிளான் வடக்கு வீரபத்திரர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லதம்பி சிவலிங்கம் அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி - ஆச்சிமுத்து தம்பதியினரின் இளைய மகனும்,

காலஞ்சென்ற சின்னையா - ஆச்சிமுத்து தம்பதியினரின் மருமகனும்,

கணேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், நல்லமுத்து, தையல்முத்து, இரத்தினசிங்கம், பவளம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சிவலோகநாதன், சிவகரன், சிவயோகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரேமாஜினி, அனுஷா, நிலோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அருஞ்சிகா, அருணிகா, சிந்து, சயன், சயூரி, சிவன்ஜா, சிவன்ஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-07-2025 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2025 04:00)