திரு. நமசிவாயம் பாலகிருஷ்ணன் (பெரியரசு)

(ஒய்வுபெற்ற முகாமையாளர் - ப.நோ.கூ.சங்கம், தம்பலகமம்)

நமசிவாயம் பாலகிருஷ்ணன் (பெரியரசு)

தோற்றம்: 04 பெப்ரவரி 1946 - மறைவு: 17 மே 2026

திருகோணமலை - பட்டிமேடு தம்பலகமத்தைப் பிறப்பிடமாகவும், இல- 528/1, கதிர்காமத்தம்பி வீதி, செல்வநாயகபுரம், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நமசிவாயம் பாலகிருஷ்ணன் அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் (உடையார்) - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா (வைராவியார்) - ஜெகதநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பேரின்பநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாந்தினி (இலண்டன்), தவபாலினி, ஹம்சபாலன் (D.O பிரதேச செயலகம், தம்பலகமம்), ருஷாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிவரூபன், சிவகாந்தன் (தபால் அலுவலகம், சீனக்குடா), கவிதா (D.O நில அளவை அலுவலகம், திருகோணமலை), தினேஸ் (இலங்கை வங்கி, கிழக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திருஞானசம்பந்தமூர்த்தி (சின்னரசு), சாரதா, லிங்கேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ஞானசோதி, காலஞ்சென்ற இராமச்சந்திரன், திருமலைநாயகி கதிர்காமநாதன், சோமஸ்கந்தன், கோணேஸ்வரி, கருணேஸ்வரி, கோணேஸ்வரநாதன் (கனடா), கங்காலோஜினி (இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

கமலலக்ஷ்மி, சர்வானந்தராஜா, ரவிதரன், சத்தியபவானி (கனடா), சுதாகரன் (இலண்டன்) ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

சிவப்பிரியா (இலண்டன்), கிருஷ், லவிஷ் ஆகியோரின்அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-05-2026 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது திருகோணமலை இல்லத்தில் நடைபெற்று,திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 76 868 5271
+94 77 888 3617

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2026 00:00)